கத்தரிக்காய் செடி:
கத்தரிக்காய் (Brinjal/Egg Plant) செடி என்பது பொதுவாக நமது வீட்டுத் தோட்டங்களிலும் மற்றும் நிலத்திலும் பயிரிடப்படும் ஒரு முக்கியமான காய்கறி செடி ஆகும். கத்தரிக்காய் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடியது.
பொது தகவல்கள்:
தமிழ் பெயர்: கத்தரிக்காய்
ஆங்கில பெயர்: (Brinjal / Egg Plant)
தாவரவியல் பெயர் : Solanum Melongena
மூலநாடு : இந்தியா மற்றும் இலங்கை
கத்திரிக்காயின் வளர்ச்சி நிலைகள்:
- முளைக்கும் காலம்: நாம் மண்ணில் விதைகள் போட்ட 5 முதல் 10 நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.
- செடியின் வளர்ச்சி: கத்தரிக்காய் செடியானது 25 முதல் 30 நாட்களில் இந்தச் செடியின் உச்சி வளர ஆரம்பிக்கிறது.
- பூ வைக்கும் காலம்: கத்தரிக்காய் செடியில் உச்சி வளர்ந்த பிறகு 40 முதல் 60 நாட்களில் இந்த செடியில் மலர்கள் பூக்க தொடங்குகிறது.
- காய்கள் வைக்கும் காலம்: கத்தரிக்காய் பூக்கள் தொடங்கிய பிறகு மொத்தமாக 60 முதல் 90 நாட்களில் கத்தரிக்காய் வைக்க தொடங்குகிறது.
கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்:
- நாம் உடலுக்கு தேவையான பொட்டாசியம்,பைபர்,விட்டமின் பி6, ஆயிரன் ஆகியவை இந்த கத்திரிக்காயில் உள்ளது
- சளி,இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையை நாம் கட்டுக்குள் வைக்க கத்தரிக்காய் நமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
- மேலும் கத்தரிக்கையானது நமது வயிற்று புண்கள் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கத்தரிக்காயின் வகைகள்:
பாரம்பரிய வகைகள்: கொஞ்சம் சிறிய அளவில் காணப்படும் மற்றும் பல்வேறு நிறங்களில் இருக்கும்
ஹைபிரிட் வகைகள்: இந்த வகையான கத்திரிக்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் பூச்சியின் தாக்கத்திலிருந்து அதிக எதிர்ப்பு தன்மை கொண்டது.
கத்தரிக்காயின் பிரபலமான நாட்டு வகைகள்:
- கோவை கத்தரிக்காய்
- குஞ்சி கத்திரிக்காய்
- தென்காசி பஞ்சு வகை கத்தரிக்காய்
- சிவப்பு மற்றும் வெள்ளை கலர்கத்தரிக்காய்.
கத்தரிக்காய் செடியை வீட்டில் வளர்க்கும் முறை:
- நமது வீட்டுத் தோட்டத்தில் முதலில் மண்ணை சரி செய்து ஈரப்பதம் மிக்க மண்ணாக தயார் செய்து கொள்ள வேண்டும்
- பிறகு கத்தரிக்காய் விதைகளை சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டும்
- விதை வைத்த பிறகு வாரத்திற்கு இரண்டு முறை நீர் பாசனம் செய்தால் போதுமானது
- நாம் நாம் கத்திரிக்காய் செடியில் பூச்சிகள் தாக்காதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கத்திரிக்காய் நிலத்தில் பயிரிடும் முறை:
நிலத்தை தயார் செய்தல்:
- கத்தரிக்காய் செடியானது மிதமான மற்றும் சிறிது மண்வளம் வாய்ந்த மற்றும் நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் இந்த செடியானது மிகவும் சிறப்பாக வளரும். மேலும் கரிசல் மண் மற்றும் சிறிதளவு சதுப்பு மண் இதற்கு ஏற்றதாக இருக்கும்.
- முதலில் மண்ணை இரண்டு தடவைகள் 6 முதல் 8 இன்ச் ஆயம் எடுத்து நன்றாக உழுதுவிட வேண்டும். பிறகு ஒரு தடவை இயற்கை உரமான மாட்டுச்சாணம் போட்டு நன்றாக உழுது விட வேண்டும்.
விதை நட்டு வைப்பதற்கு முந்தைய நிலை:
- விதையை முதலில் வைப்பதற்கான இடம் சரியாக இருக்க வேண்டும்
- விதைகளை நன்கு நீரில் ஊற வைத்தாள் விதை முளை விகிதம் அதிகரிக்கும்
- விதையை சிறு துணியிலோ அல்லது ஏதோ ஒரு கவரிலோ அல்லது ஏதோ ஒரு பாத்திரத்திலோ எடுத்துச் சென்று விதைக்கலாம்
- 25 முதல் 30 நாட்கள் வளர்ந்த செடிகளையும் நாம் நிலத்தில் நட்டு சரியாக பராமரித்து வளர்க்கலாம்.
விதையை நட்டு வைக்கும் காலம்:
- இந்த விதையினை ஜூன் மற்றும் ஜூலை அல்லது ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் நட்டு வளர்ப்பது சிறந்தது
- தென்னிந்தியாவில் இந்த பயிர் மிகவும் சிறப்பாக பயிரிடப்படுகிறது.
செடியின் இடைவெளி:
- ஒவ்வொரு செடிக்கும் சுமார் 60 சென்டிமீட்டர் அளவு இடைவெளி இருக்க வேண்டும்
- இந்த அளவுக்கு இடைவெளி விடும் போது சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் சரியாக இருக்க உதவும்.
உரமிடும் முறை:
நிலத்தில் மாட்டுச்சாணி உபயோகிக்கலாம்.ரசாயன உரங்களையும் பயன்படுத்தலாம் (தேவைப்பட்டால்)
- நைட்ரஜன் - 100கி.கி
- பாஸ்பரஸ் - 50கி.கி
- பொட்டாசியம் -50கி.கி
இந்த ரசாயன உரங்களை மூன்று கட்டமாக பிரித்து தருவது நல்லது:
- 1/3 விதைக்கும் போது
- 1/3 30 நாட்களுக்குப் பிறகு
- 1/3 பூத்து விட்டதும்
நீர் பாசனம்:
- விதை விதைத்த பின் உடனடியாக பாசனம் தேவை
- செடிகள் வேர் விடும்வரை 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் தேவை
- வேர் வந்த பிறகு வாரத்திற்கு இரண்டு முறை போதுமானது
- வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதியில் இருந்தால் நிலத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.நிலத்தை காயாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூச்சி பாதிப்பு கட்டுப்படுத்தும் முறை:
பூச்சி தாக்கங்கள்:
கத்திரிக்காய் துளை ஈடு புழு, வெள்ளை ஈ, திரிப்ஸ், நத்தை பூச்சி
நோய் பெயர்கள்:
வேர்ச்சுயர்ச்சி மற்றும் மாவு தூசி
தடுப்பு முறைகள்:
- வேப்ப எண்ணெய் தெளித்தால் பூச்சிகள் தாக்கம் குறையும்
- இயற்கை பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தலாம்
- பாதிக்கப்பட்ட காய்கள் மற்றும் இலைகளை அகற்றலாம்.
அறுவடை காலம்:
- காய் விதைத்த 60 முதல் 90 நாட்களில் நாம் முதல் அறுவடை செய்யலாம்.
- ஒரு கத்தரிக்காய் செடியில் இருந்து சுமார் 2 முதல் 4 கிலோ கத்தரிக்காய் பறிக்கலாம்.
- காய்கள் மிகவும் கவனமாக பறிக்க வேண்டும்.
செடியை வளர்க்கும் போது கவனிக்க வேண்டியவை:
- கத்தரிக்காய் செடியின் வேர்கள் வெளிவராமல் குப்பையை அல்லது மண்ணைக் கூட்டி வைக்க வேண்டும்
- தேவையற்ற கலைகளை அகற்ற வேண்டும் வாரத்திற்கு இரண்டு முறை
- 15 நாட்களுக்கு ஒரு முறை வேப்பெண்ணெய் கொண்டு செடியின் மேல் தெளிக்கலாம்.
மேலும் சிறப்பு தகவல்:
கத்தரிக்காய் குழம்பு வைக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
(இது சுமார் ஐந்து பேர் அளவிற்கு சாப்பிடுவதற்கு மட்டும்)
- கத்தரிக்காய் (ஐந்து அல்லது ஆறு நன்றாக சுத்தம் செய்து கழவி நறுக்கி வைக்கவும்)
- வெங்காயம் -1
- தக்காளி -1
- பூண்டு -1
- கறிவேப்பிலை -சிறிதளவு
- மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் -1 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 2டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
- பெருங்காயம் - சிட்டிகை
- சாம்பார் தூள் -1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
- மிளகு -1/2டீஸ்பூன்
- வெந்தயம் -1/4 டீஸ்பூன்
- கடுகு -1/2 டீஸ்பூன்
- புளி - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பாத்திரத்தை வைத்து கடையில் எண்ணெய் ஊற்றி வெதுவெதுப்பானதும் சிறிதளவு கடுகு சேர்த்து வெந்தயம் மிளகு மற்றும் பெருங்காயம் போடவும்
- பின் பின் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- வெங்காயம் வெந்ததும் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கும் வரை வதக்கவும்
- அதில் நாம் நறக்கி வைத்த கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
- மஞ்சள் தூள் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- பிறகு புலி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்
- கடைசியாக குழம்பு நன்கு காய்கள் வெந்த பிறகு நன்கு கெட்டியாகி என்னை பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
இதோ நீங்க எதிர்பார்த்த கத்திரிக்காய் குழம்பு ரெடி!



0 Comments